08 June 2006

முக்கியமில்லாத சில குறிப்புகள்

மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,என் வலைப்பூ விவரங்களை அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: சுதர்சன்.கோபால்

வலைப்பூ பெயர் : ஓ...!!!

சுட்டி(உர்ல்) :http://konjamkonjam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சொந்த ஊர்: கோவை,தற்போது இருப்பது:பெங்களூர்

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிள் மற்றும் தமிழோவியம்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 22/ஜூன்/2005

இது எத்தனையாவது பதிவு: 49

இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://konjamkonjam.blogspot.com/2006/06/blog-post_08.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழில் எழுதுவது என்பது மனதில் தேக்கி வைக்கப்பட்ட ஆசையாக இருந்தது.நீண்ட நாள் கனவு என்று கூட சொல்லலாம்.தற்போதைய எனது சூழலில் அது நனவாவது வலைப்பூக்களின் மூலமே சாத்தியம் என்று உணர்ந்ததால்.

சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்.கல்லூரியில் வெகு தினங்களுக்கு முன் சந்தித்த ஒரு சீனியரை அவரது பதிவுலகு மூலம் மீண்டும் எதிர்பாராத வகையில் சந்தித்தது என்று சங்கிலித் தொடர் போலே செல்லும் அனுபவங்கள்.

பெற்ற நண்பர்கள்: ஏராளம்

கற்றவை:ரொம்பக் கம்மி.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வித்தியாசமான களங்களில் பயணிக்கத் தூண்டுகிறது.

இனி செய்ய நினைப்பவை: கடற்கரையில் உள்ள கூழாங்கற்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் போன்று உணர்கிறேன்.இன்னமும் முழுமையாக உணர்ந்தறியா ஒரு சமுத்திரம் என் முன்னே இருக்கிறது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:இரண்டு விஷயங்களுக்காக நான் இதயம் திறப்பேன்.ஒன்று காதல்;மற்றொன்று சுதந்திரம்.காதெலென்றால் நான் இதயம் தருவேன்.சுதந்திரமென்றால் காதலையும் தருவேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இந்த உலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது.

5 Comments:

ilavanji said...

//இரண்டு விஷயங்களுக்காக நான் இதயம் தருவேன்.ஒன்று காதல்;மற்றொன்று சுதந்திரம்.காதெலென்றால் நான் இதயம் தருவேன்.சுதந்திரமென்றால் காதலையும் தருவேன். //

ம்ம்ம்.. ஒரு முடிவோட இருக்கீங்க! கலக்குங்க! :)))

பொன்ஸ்~~Poorna said...

//இரண்டு விஷயங்களுக்காக நான் இதயம் திறப்பேன்.ஒன்று காதல்;மற்றொன்று சுதந்திரம்.காதெலென்றால் நான் இதயம் தருவேன்.சுதந்திரமென்றால் காதலையும் தருவேன்//

//இந்த உலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது//

அது சரி.. மேட்டர் சரியா புரியலை.. பேசாம உங்களைப் பத்தி ஒரு கிசு கிசு போடுங்க!! :)

Sud Gopal said...

//ம்ம்ம்.. ஒரு முடிவோட இருக்கீங்க! கலக்குங்க! :))) //

ஹூம்..என்னத்தக் கலக்கி...என்னத்தப் பண்ணி....

Sud Gopal said...

//அது சரி.. மேட்டர் சரியா புரியலை..//

இதனால தான் வரிகளுக்கிடையே படிக்ககறது தப்புன்னு சொல்லி வச்சாங்க...

// பேசாம உங்களைப் பத்தி ஒரு கிசு கிசு போடுங்க!! :) //

திருப்பதிக்கே லட்டா??? கோயம்தூருக்கே குசும்பா??

Pavals said...

ஒரே ஒரு அனுபவத்தை சொல்லியிருக்கீங்க, அதுவும் இவ்ளோ பயங்கிறமான அனுபவமா சொல்லியிருக்கனுமா.. :)

சுதந்திரமா இருக்க வாழ்த்துக்கள்.!!

(எல்லாம் இப்படி பேசுன பயபுள்ளைக தான)