பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டபிறகும் சிறிது கூட நம்பிக்கையத் தளர விடாத குணம்,அனைவரையும் தன் பால் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி பெற்றிருப்பது(crowd puller),சூழலுக்குத் தக்கவாறு தனது ஆட்டத்தை மாற்றி ஆடுவது என்று பல்வேறு ஒற்றுமை இருப்பினும், மேலே குறிப்பிட்ட மூன்று பேரையும் ஒரு புள்ளியில் இணைப்பது அவர்கள் பிறந்த தேதி தான்.
ஆம்.மூன்று பேருமே வெவ்வேறு கால கட்டங்களில் 12 திசம்பரில் தான் பிறந்தனர்.
பாபாவின் தோல்வியை சந்திரமுகியின் சரித்திரம் காணா வெற்றியால் சமன் படுத்தியது,அவுட் ஆஃப் பார்மிலிருந்து அடுத்த தொடரிலேயே ஆட்ட நாயகனானது,டால்மியா என்ற முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு கட்டியது என்று இந்த மூவேந்தர்களின் காட்டில் இப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது.
சந்திரமுகியின் வெற்றியை சிவாஜியில் தக்க வைத்துக் கொள்வது,டெஸ்ட் மேட்ச் ஸ்க்வாடில் புதிதாய் வந்திருக்கும் ஆல்ரவுண்டரிடம் இருந்து தனது ஸ்லாட்டை பத்திரப்படுத்துவது,இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் ஏகபோக சக்ரவர்த்தியாய் இருந்த டால்மியாவை வரும் காலங்களில் சமாளிப்பது என்று சவால்களும் இவர்களை எதிர் நோக்கி இல்லாமல் இல்லை.
வரும் வருடம் இவர்களது தொப்பியில் மேலும் பல சிறகுகளை இணைக்க எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
05 December 2005
சரத்பவார்,யுவராஜ் சிங் மற்றும் சிவாஜிராவ் கெய்க்வாட்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
சந்திரமுகியின் வெற்றியை சிவாஜியில் தக்க வைத்துக் கொள்வதா? அந்தப் பழக்கமே தலைவருக்கு கிடையாதுங்கறேன். பாபாவை தவிர்த்து தலைவரின் படங்களை பார்த்தீர்களானால், முந்தைய படத்தின் வெற்றியை பிரமாண்டமாக தகர்த்தெறிந்து புதிய சாதனை படைத்ததாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில், கண்டிப்பாக சந்திரமுகியின் வெற்றி சாதனையை தகர்க்க வல்ல ஒரே படம் சிவாஜி தான்...!
சரத் பவார் தனிக்கச்சி ஆரம்பிச்ச கொள்கை கருமாந்தரத்தை எல்லாம் உட்டுபுட்டு சோனியா கூட கூட்டணி வச்சது,ரசினி காந்தம் அம்மாவை "தகிரியலச்சுமி"ன்னு சொன்னது எல்லாம் கூட ஒத்துப் போறாப்பல தான் தெரியுது.
ரஜனியின் பிறந்தநாள் 12 தானா?
ஏழாம் திகதி என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
பல்லுப் போய்,முடி நரச்ச கெழடு கட்டைகளோட யுவியை கம்பேர் பண்ணி எழுதியிருக்கிற உனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.
Post a Comment