23 December 2005

|~~ அதிரூபன் தோன்றினானே ~~|


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே,
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே,
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே,
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றிட சிசுபாலன் தோன்றினானே,
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே,
முட்காடு எங்கிலும் பூக்காடு காணவே புவிராஜன் தோன்றினானே.

2 Comments:

தாணு said...

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

Merry XMAS!!