25 October 2005

தீபாவளியில் இருந்து...

மாற்றமே நிரந்தரமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் எனது திட்டக்குழுவில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால் பதிவுகள் இடுவதில் ஒரு சிறிய இடைவேளை விட நேரிட்டது.

புஷ்பவனத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு கின்னஸ் சாதனை(அதில் எங்களது பங்களிப்பு),மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்குச் சேருவதில் நிகழும் முறைகேடுகள்,மீண்டுமொரு சிறுகதை,ஆவியின் விலை உயர்வு என்று பல்வேறு விஷயங்கள் மனத்தில் தோன்றுகின்றன.தீப ஒளித் திருநாள் முடிந்ததும் மீண்டும் பதிவிடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பண்டிகை நாள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

5 Comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சுதர்சன்,

என்னிக்கு தீபாவளி?

சாதாரணமாகவே எங்க ஊர்ல கொண்டாடுறதில்லியா. கனடாவுல இன்னும் குறைவு.

சும்மா தெரிஞ்சுக்கக் கேக்குறன்.

-மதி

Ramya Nageswaran said...

சுதர்சன் கோபால், என்ன ஊர்லே தான் இருக்கீங்களா? திட்டக்குழுவிலே ஏற்பட்டது நல்ல மாற்றம் தானே?

உங்களுக்கு தீபாவளிக்கும், வலைப்பதிவுகளுக்கு திரும்ப வர்றத்துக்கும் நல்வாழ்த்துக்கள்!!

துளசி கோபால் said...

என்ன மதி இப்படிக் கேட்டுட்டீங்க?

தீபாவளி(அசல்) நவம்பர் 1.
ஆனா இங்கே அக்டோபர் 22 முதல்!!

பதிவு ஒண்ணூ போட்டுக்கிட்டு இருக்கேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றி துளசி.

தீபாவளிக்குன்னு ஒண்ணும் செய்யப்போறதில்லை. சும்மா ஒரு விசாரிப்பு - அதுவும் அப்பா எங்கிட்ட கேட்டதை நான் இங்கே கேட்டேன். :)

நன்றி. உங்க பதிவைப்படிச்சுட்டேன். ஆனாலும் மெனுவைப்போடாமல் சாகடிக்கிறீங்கப்பா. ;)

-மதி

பி.கு.: சுதர்சன் உங்க பின்னூட்டப்பெட்டியில் பூந்துவிளையாடுவதற்கு மன்னியுங்க.

Ganesh Gopalasubramanian said...

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுதர்சன்