13 September 2005

அனைவருக்கும் நன்றி!!!

முடிவுகள் வெளியாகும் முன்னமேயே,இந்தக் கதை பரிசு பெறத் தகுதியானது என்று ஊகித்த,கருத்துத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

இளம்பிராயத்தில் நான் பழனியில் இருந்த போது,எப்போதும் என் தாத்தாவோ அல்லது மாமாவோ தான் என்னை முடி திருத்தகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.அப்படி ஒரு முறை என் தாத்தாவுடன் சென்ற போது,நான் கண்ட ஒரு வேதனையான காட்சியே இந்தக் கதை எழுதக் காரணியாய் இருந்தது.என்னுடன் பயின்று வந்த தந்தையை இழந்த மாணவன் ஒருவன் தனது தாயுடன் முடி திருத்துவதற்காக அதே சலூனுக்கு வந்திருந்தான்.என் நண்பன் முடி திருத்தி முடிக்கும் வரை,வரக்கூடாத இடத்திற்கு வந்தது போலத் துடித்த அந்தத் தாயின் தவிப்பு நிறைந்த முகம் இன்னமும் என் கண் முன்னே விரிகிறது.

அந்த அரைமணி நேரம் தந்த அனுபவத்தை அவர் வாழ்நாளில் மறந்திருக்க வாய்ப்பிலை என்றே எண்ணுகிறேன்.கிராமத்து/சிறு நகரத்து, மகளிர் முடி திருத்தகம் போன்ற ஆண்கள் மட்டுமே பெரும்பான்மையாகப் புழங்கும் இடங்களுக்குச் செல்வது இன்றும் ஒரு அரிதான நிகழ்வாகாகவே உள்ளது.அதையும் மீறிச் செல்லும் சிறுபான்மை மகளிர்க்கும் உரிய மரியாதையோ,இணக்கமான சூழலோ அளிக்கப்படுவதில்லை.இது எப்போது மாறும்???

இந்த வெற்றி தந்த ஊக்கம்,மேலும் பல படைப்புகளை உருவாக்க உறுதுணையாய் இருக்கும் என நம்புகிறேன்.என் உழைப்பு மேல் அயராத நம்பிக்கை கொண்டிருக்கும் என் பெற்றோருக்கும்,எனது முதல் வாசகியான என் தங்கைக்கும்,என்னுள் படிக்கும் பழக்கதை வித்திட்டவரும்,எனது வெற்றிகளைப் பார்க்காமலேயே அமரர் ஆனவருமான என் அம்மா வழிப் பாட்டனாருக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு போட்டியை நடத்தியதன் மூலம் பல்வேறு படைப்பாளிகளை உருவாக்கிய அமைப்பாளர்,சக வலைப்பதிவர் முகமூடிக்கும்,தனது தீராத வேலைப்பளுவிற்கிடையேயும் நேரத்தை ஒதுக்கி,விரிவான அலசலுடன் முடிவுகளை வெளியிட்ட நடுவர் மாலன் அவர்கட்கும் ஒரு ஸ்பெஷல் "ஓ"...

9 Comments:

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சுதர்சன்.

மேலும் பலவெற்றிகளைப்பெற
வாழ்த்துக்கின்றேன்.

என்றும் அன்புடன்,
அக்கா

Suresh said...

வாழ்த்துக்கள் சுதர்சன் !!!

Ganesh Gopalasubramanian said...

சுதர்சன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சுதர்சன்

Kannan said...

வாழ்த்துக்கள் சுதர்சன்!

Anonymous said...

வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.

யாத்ரீகன் said...

சுதர்சன்.. அருமையான கதை.. சொல்ல வந்த விஷயத்தை.. பளிச்சென்று சொன்னது..

இந்த கதை வெற்றி பெற்றதற்கான காரணமாக ஓர் வாசகனாக நான் கருதுவது, சராசரியான கதையப்போல் இல்லாமல்.. , ஓர் நிகழ்வை அப்படியே படம்பிடித்ததால் தான்..

வாழ்துக்கள்..

neyvelivichu.blogspot.com said...

மிக நன்றாக இருந்தது கதை. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

அன்புடன் விச்சு

Chandravathanaa said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சுதர்சன்