30 June 2006

குட்டீஸ்

மும்பையில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் மதிய டேப்லாய்டு பத்திரிக்கையான "மிட் டே" நேற்று முதல் பெங்களூரு பதிப்பைத் துவங்கி இருக்கிறது.நகரின் பல்வேறு இடங்களில் பார்த்த சுவாரசியமான விளம்பரப் பலகைகள் மூலமே இந்தத் தகவலை அறிய முடிந்தது.கடைக்குச் சென்று கேட்ட போது "ஸ்டாக் இல்லா குரு" என்ற கடைக்காரரிடம் இன்றைய பதிப்புக்கு முன்பதிவு செய்து வந்துள்ளேன்.பெங்களூரைப் பொறுத்தவரை மாலை நேரப் பத்திரிக்கை என்னும் தளம் இன்னமும் unexplored ஆக இருப்பதாலும்,இதன் கண்டெண்ட்(obviously junk) பெங்களூரின் பையிங் பாப்புலேஷனான IT,BPO மக்களுக்குப் பிடித்தமான ஒன்று என்பதாலும் இந்தப் பத்திரிக்கை ஒரு பெரிய சுற்று வரும் என தீர்க்கமாகக் கூறலாம்.ஆனானப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கே மும்பையில் தண்ணி காட்டிய மிட் டேயின் வரவு நல்வரவாகுக.

*************************************************************************************

இந்த சீசன் கோலிவுட்டில் நடனம் சொல்லித்தந்தவர்கள்,திரைப்பட இயக்குனர்களாக உருவெடுக்கும் சீசன் போல.பிரபுதேவா,ராகவேந்திரா லாரன்ஸ் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் ராஜூ சுந்தரம்.பிரபுதேவாவும்,ராகவேந்திரா லாரன்ஸும் தெலுங்கில் தங்களது இயக்குனர் பணியை ஏற்கனவே துவங்கியிருந்த போதும் ராஜூ சுந்தரம் இப்போது தான் களத்தில் குதிக்கிறார்.

புதிய களம்.புதிய பொறுப்புகள்...ஆல் த பெஸ்ட் மக்களே...

*************************************************************************************
தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ்-ஏர் சஹாரா இணைவதில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்புலத்தில் விரைவில் உபி.யில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலே காரணம் போலத் தெரிகிறது.அமர்சிங்குக்கும்,ஏர்-சஹாரா குழுமத்தின் சுப்ரதோ ராயிக்குமிடையேயான நட்பு, முலாயம்,அமர்சிங் வகையறாக்களுக்கும் மேடம் ஜீ முகாமுக்கும் இருந்து வந்த சண்டை போன்ற தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது உண்மையாய் இருப்பதாகவே தொன்றுகிறது.

*************************************************************************************
"கபீ அல்விதா நா கெஹ்னா" என்ற விரைவில் வெளிவரவிருக்கும் தெரை ஓவியத்தின் மூலம் தன்னுடைய ஐந்தாண்டுகால ஹிபர்னேஷனில் இருந்து வெளி வருகிறார் கரண்ஜோஹர்.என்.ஆர்.ஐ. மக்களைத் திருப்தி செய்யும் வகையில் அமெரிக்காவினைக் கதைக்களனாகக் கொண்ட இப்படத்தில் அமிதாப்,ஷாரூக், அபிஷேக்,ராணி முகர்ஜி,ப்ரீத்தி ஜிந்தா என்னும் ஒரு பெரிய கும்பலே தெறம காட்டியிருக்கிறார்கள்.கரணோட பேட்டியைப் படிச்சா இந்தப் படம் பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டு கர்ச்சீப் பத்தாதுன்னு தோணுது.

****************************************************************************************
எனக்குப் பிடித்த கவிதை ஒன்று:
புலிகளைப் போல முதலை
மான்களைத் துரத்திப் போகா
காக்கைகளைப் போல எச்சில்
இலைகளை நோட்டம் போடா
எலிகளோ,ஈசல் கொல்லும்
பல்லியோ அல்ல முதலை
கழுத்துவரை நீரில் அமர்ந்து
கரையோரம் பார்த்திருக்கும்
வேட்டைக்கு எறும்பு போகும்
புல்வெளியில் ஆடு மேயும்
உலகத்து உயிர்கள் எல்லாம்
உணவுக்கு பேயாய் பறக்க
வீட்டினில் இரையைத் தேடி
ஏங்குவது முதலை மட்டும்
ஒருஇலை விழுந்தால் கூட
முதலையின் முதுகு சிலிர்க்கும்
ஒரு சுள்ளி முறிந்தால் கூட
முதலையின் முகவாய் நிமிரும்
ஒரு முறை சிக்கினாலும்
உயிர் கொல்லும் போராட்டம்
சக்கரம் அறுத்த போதும்
முதலைகள் பிடியைத் தளர்த்தா
ஒரு அந்தணக் குழந்தை கேட்க
முதன்முதலாய் முதலை விட்டது
பின் மனிதரை வளர்த்ததெல்லாம்
நீர் முதலை வழங்கிய வேதம்.
****************************************************************************************
தேன்கூடு-தமிழோவியம் ஜூன் மாதப் போட்டியில் என்னுடைய கட்டுரைக்கு 24 வாக்குகள் அளித்து என்னை ஐந்தாவது இடத்தைப் பிடிக்க வைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
****************************************************************************************

4 Comments:

Boston Bala said...

அவியல் நன்றாக இருக்கு

ilavanji said...

தலைப்பு கிளுகிளுப்பு! (அதுக்கேத்த மாதிரி ஒரு படம் கூடவா கிடைக்கல?! ) :)


கவிதை பாலகுமாரனா?

Sud Gopal said...

----அவியல் நன்றாக இருக்கு----

பாபா,வாங்க.

அவியல்ல கொஞ்சம் மசாலா தூக்கலோ??

Sud Gopal said...

---- தலைப்பு கிளுகிளுப்பு! (அதுக்கேத்த மாதிரி ஒரு படம் கூடவா கிடைக்கல?! ) :) -----

வாத்யாரா இருந்துட்டு இப்படி படிக்கற பசங்க மனசைக் கெடுக்கறீங்களே..இது அடுக்குமா???(அப்படி ஏதாவது படம் இருந்தா அனுப்பித்தான் வையுங்களேன்.ஹி..ஹி..ஹி..).

அது பாலகுமாரனோட கவிதை தான்.