21 March 2006

மறக்க முடியுமா??

2002ஆம் ஆண்டு, மே மாதம், ஏதாவது ஒரு ஞாயிறு இரவு சுமார் 8.30 மணி தொடங்கி 9 மணி வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?

அந்த நேரத்தை "மறக்க முடியுமா" என்று நினைப்பவர்கள் எல்லாம் கை தூக்குங்கள் பார்ப்போம்? அட நான் நினைத்ததை விட எண்ணிக்கை அதிகமா இருக்கே?

வாரம் ஒரு முறை என்று இருந்த தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்,தினப்படி மெகாசீரியல்களாய் மெல்லப் பரிணாம வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த காலமது.ரயில் சினேகம்,கரிப்பு மணிகள்,பகலில் ஓர் இரவு என்று தூர்தர்ஷனின் குட் ஓல்ட் டேஸ் நினைவுகளில் இருந்த என்னை சன் டீவியில் வந்த எந்த தொடர்களும் பெரிதாய்க் கவரவில்லை(மர்ம தேசம்,ரமணி Vs. ரமணி இதில் விதிவிலக்கு).எதேச்சையாக ஒரு ஞாயிறு இரவு உணவுக்குப் பின் தொலைக்காட்சிப்பெட்டியைக் குடைந்து கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சியில் "இந்தக் கேள்விகள் எழுந்த பின்பும்,இடறிக் காதலில் விழுந்த பின்பும் மறக்க முடியுமா" என்ற வரிகளுடன் வந்த பாடல் என்னைக் கட்டிப்போடவே "மறக்க முடியுமா"வைப் பார்க்க ஆரம்பித்தேன்.விஜய் ஆதிராஜ்,மௌனிகா,தேவதர்ஷினி(க.மு.),தேவிப்பிரியா,வத்சலா பாட்டி,மோகன் ராம் போன்ற தேர்ந்த நடிகர்களின் இயல்பான நடிப்பும்,ஆரம்ப காலகட்டத்தில் விறுவிறுப்பாய்ச் சென்ற கதையும்,காட்சியமைப்புகளும்,ஸ்ரீபிரியாவின் தேர்ந்த இயக்கமும் இத்தொடரைச் சில வாரங்கள் தொடர்ந்து பார்க்க வைத்தன.இந்த எல்லாவற்றையும் விட இத்தொடரின் தலைப்புப்பாடலே என்னைப் பெரிதும் ஈர்த்தது.சித்தி,கிருஷ்ணதாசி போன்ற தொடர்களின் வெற்றிக்குப் பின்னர் டெலிசீரியல் என்றாலே நித்யஸ்ரீ மகாதேவனின் ஹைபிட்ச் குரலில் டைட்டில் பாடல் இருக்க வேண்டும் என்ற ஃபார்மேட்டை உடைத்தெறிந்து வந்த ஒரு இனிமையான பாடல் அது.அப்போது தான் "கன்னத்தில் முத்தமிட்டால்" மூலம் அனைவரது கவனத்தையும் கவனத்தை ஈர்த்த சின்மயி குரலில்,தீனாவின் இசையில்,வாலியின் வரிகளில் வரும் இந்தப் பாடலை யாராவது மறக்க முடியுமா?

பாடலை ரியல் ப்ளேயரில் கேட்க -> http://raretfm.mayyam.com/stream/tvserial/Marakka_Mudiyuma-Ulaga_medayil.rm

ஆனந்த பவனம்,பஞ்சவர்ணக்கிளி,அக்ஷயா,புஷ்பாஞ்சலி என்ற வாராந்திரத் தொடர்களுக்குப் பின் "விகடன் டெலிவிஸ்டாஸ்" தயாரித்த முதல் மெகா தொடர் "அலைகள்".2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எதோ ஒரு திங்கள் கிழமையில் ஆரம்பித்த இந்தத் தொடர் முதலில் மாலை 7.30க்கும் பின்னர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கிடைத்த அபார முன்னணி காரணமாய்ப் ப்ரைம் டைமான 9மணிக்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாய் ஐந்நூறு எப்சோடுகளுக்கு மேல் வெற்றிகரமாய் ஒளிவலம் வந்தது.முன்பொரு காலத்தில் மகேந்திராவின் இணையாய் நகைச்சுவை வேடங்களில் நடித்து பின்னர் பாடகர் கிருஷ்ணசந்தரைத் திருமணம் செய்து கொண்டு ஹிபர்னேஷனில் இருந்த வனிதா அவர்களுக்கு இத்தொடர் ஒரு கம்பேக் வெகிகிளாக அமைந்தது.பாடகர் A.L.ராகவன்,ஜெயச்சித்ரா,வடிவுக்கரசி,ராஜேஷ்,ஒரு கேமியோ ரோலில் எம்.என்.நம்பியார் என்று ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருந்த போதிலும் அனைவரது கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது வேணு அர்விந்தும்,துர்காவுமே.

தீனாவின் இசையில்,வைரமுத்துவின் வரிகளில் மற்றுமொரு தலைப்புப் பாடல்.இதில் ஆச்சரியப்படச் செய்வது பாடலைப் பாடத் தேர்ந்துடுக்கப்பட்ட குரல்கள் தான்.கவிதா(கிருஷ்ணமூர்த்தி) சுப்ரமணியமும்,ஸ்ரீராமும் ஒரு வித்தியாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்தப் பாடலை தங்கள் குரல்களால் அற்புதப்படுத்தி இருப்பார்கள்.நேசல் வாய்சில் பாடும் கவிதாவின் குரலின் மீது என்னையும் சேர்த்துப் பலருக்கும் மாறாத நேசம் இருப்பது உண்மையே.தைய்யா தைய்யா,வெற்றிக் கொடி கட்டு போன்ற பல பிரபலமான பாடல்கள் பாடியிருந்த போதும் ஸ்ரீராம் இன்னமும் பிரபலமாகவில்லை என்பது ஒரு வருத்தமான தகவல்.

"ஒவ்வொரு மனிதன் வாழ்வும்,
ஒரு பயணம் என்பதை அறிவீர்.
அதன் தூரம் என்ன நேரம் என்ன
யார்தான் அதனை அறிவார் "

பாடலை ரியல் ப்ளேயரில் கேட்க ->
http://raretfm.mayyam.com/stream/tvserial/Alaigal-Sutrum_boomi.rm

8 Comments:

Sud Gopal said...

மேலே குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே எனக்குப் பரிச்சயமான் நிலையில் இந்தத் தொடர்கள் பற்றி மேலதிகத் தகவல்கள் தந்து உதவிய தங்கைக்கு நன்றி.

Anonymous said...

My favourite song is "Aadugiran Kannan". I was searching all over the net.. Thanks for giving this link.

Anonymous said...

அங்கே போயி இங்கே போயி, கடைசியிலே சீரியல் பாட்டு வரை வந்தாச்சா? சுத்தமடா சாமி!

Sud Gopal said...

அனானி 1:
//Thanks for giving this link.//

You are most welcome. என் கடன் தொண்டர் பணி செய்து கிடப்பதே.

அனானி 2:
//அங்கே போயி இங்கே போயி, கடைசியிலே சீரியல் பாட்டு வரை வந்தாச்சா? சுத்தமடா சாமி!//

மேட்னி ஷோ போயிட்டிருந்த தாய்க்குலம் எல்லாம் இப்போ மெகா சீரியல்ல மூழ்கிட்டாங்க.அவுங்களோட ஆதரவும் நம்ம வலைப்பதிவுக்கு வேணுமில்ல.அதனாலத் தான் இந்த முயற்சி.

Sangitha.Gopal:
It DOES work.

G.Ragavan said...

சின்ன வயசுல சென்னைத் தொலைக்காட்சியில் வந்த சில நாடகங்கள் இன்னும் நன்றாக நினைவிருக்கு. ஸ்ரீகாந்த் நடித்த ஒரு நாடகம். நேர்மையான அரசியல்வாதியாக இருப்பார். அம்மா ஊரில் தனியாக இருப்பார். கொஞ்சம் மெதுவாகப் போகிறது போல இருக்கும். ஆனால் நான் அதை ரசித்துப் பார்த்தேன்.

ஜனதாநகர் காலனி, சரஸ்வதியின் செல்வன்...இரண்டுமே...எனக்கு ரொம்பப் பிடித்தவை. இவைகளின் வீசிடியோ டீவிடியோ யாராவது கொடுத்து உதவினால்....தலைவாழை இலை போட்டு சமைத்துப் போடப்படும்.

நூபுர் என்று ஒரு ஹிந்தி நாடகம். ஹேமாமாலினி நடித்தது. வாரம் ஒரு வசனம் தமிழில் வரும். அதற்காக உட்கார்ந்து அந்த நாடகம் பார்ப்பேன். "உமா...உப்புமா குடு"....அவ்வளவுதான். மத்ததெல்லாம் கியா ஹே கோன் ஹே....ஆனாலும் பார்த்தேன்.

அதற்குப் பிறகு இந்திரதனுஷ், Fairy Tale Theatres இன்னும் நிறைய.

சன் டீவியில் தொடக்ககாலத்தில் ஒரு நாடகம் வந்தது. எளிமையான கதைக்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் துணி தேய்க்கிறவரிடம் ஊரிலிருந்து வேலை பார்க்க வந்திருக்கும் சிறுவந்தான் கதாநாயகன். ரொம்பவே இயல்பாக நன்றாக இருக்கும். அதையும் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

மர்மதேசம்...விடாது கருப்பு.....சித்தி பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் நாடகங்களை நான் பார்த்ததில்லை. இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் நாடகங்களே பார்ப்பதில்லை. தொலைக்காட்சியே மிகக் குறைவு.

Sud Gopal said...

G.Ragavan:
//ஸ்ரீகாந்த் நடித்த ஒரு நாடகம். நேர்மையான அரசியல்வாதியாக இருப்பார். அம்மா ஊரில் தனியாக இருப்பார். கொஞ்சம் மெதுவாகப் போகிறது போல இருக்கும். ஆனால் நான் அதை ரசித்துப் பார்த்தேன்.//
அந்தத் தொடரோட பேரு சூரியவம்சம்.அம்மா சொன்னாங்க.

//இவைகளின் வீசிடியோ டீவிடியோ யாராவது கொடுத்து உதவினால் தலைவாழை இலை போட்டு சமைத்துப் போடப்படும்.//
ஆகட்டும் பார்ப்போம்.

//இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் நாடகங்களே பார்ப்பதில்லை//
உங்க கல்யாணத்துக்கு அப்புறம் இதே டயலாக் அடிக்கிரீங்களான்னு பார்க்கத் தானே போரோம்...

யாத்ரீகன் said...

சுதர்சன்.. ஒருவழியா கிடைச்ச நேரத்துல "நாலு" சங்கிலிப்பதிவை பதியலாமென்று விவரத்தை உங்க இந்த பதிவை படிக்க முனைந்தால் , பக்கத்தில் ஒன்றுமே லோட் ஆவதில்லை, http://konjamkonjam.blogspot.com/2006/03/blog-post.html இந்த பக்கத்தில் மட்டும் :-( யூனிகோட் டெக்ஸ்ட் கோப்பாக சேமித்து, Zip செய்து எனக்கு அனுப்பி வைக்க இயலுமா ? சிரமத்துக்கு மன்னிக்கவும்...

யாத்ரீகன் said...

சுதர்சன்.. ஒருவழியா கிடைச்ச நேரத்துல "நாலு" சங்கிலிப்பதிவை பதியலாமென்று விவரத்தை உங்க இந்த பதிவை படிக்க முனைந்தால் , பக்கத்தில் ஒன்றுமே லோட் ஆவதில்லை, http://konjamkonjam.blogspot.com/2006/03/blog-post.html இந்த பக்கத்தில் மட்டும் :-( யூனிகோட் டெக்ஸ்ட் கோப்பாக சேமித்து, Zip செய்து எனக்கு அனுப்பி வைக்க kolkataprince at gmail dot com இயலுமா ? சிரமத்துக்கு மன்னிக்கவும்...