20 March 2006

என்ன செய்யப் போகிறாய்???

நாற்பத்தெட்டு மணி நேரமும் நத்தையாய் ஊர்ந்து செல்கிறது.
புதுப்பாலில் சுடச்சுடப் போடப்பட்ட தேனீரோ ஆடை படிந்து அமைதி காக்கிறது.
என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று சுத்தமாய்த் தெரியாது.
என்னைப் பிடிக்குமா என்பது தெரியவே தெரியாது.
ஆசைகள்,கனவுகள்,இலக்குகள்,தோல்விகள் இன்னமும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.
அங்கே எனக்கு ஒரு இடம் இருக்குமா என்ற கேள்விக்கு விடையேதும் அறியவில்லை.
உற்றார்,பெற்றோர் பற்றி ஒன்றுமே தெரியாது.
பெயர்,ஊர்,கல்வி,வேலை மட்டுமே தெரியும்.
அனுப்பும் மயில்களுக்குப் பதில் ஏதுமில்லை.
குறுஞ்செய்திகளும் கவனத்தை ஈர்த்தனவா என்று விபரம் ஏதுமில்லை.

பன்னிரண்டு விரல்களின் நகங்களை காலியாக்கியும் இன்னுமா உன் பசி அடங்கவில்லை??

"பழகும் விதங்களைப் பார்க்கையிலே,
பல வருடப் பரிச்சயம் போலிருக்கும்.
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்.
முதலாம் பார்வையிலே...."


பின்குறிப்பு:- இப்போ குட்டி,குட்டியாப் பதிவு போட்டாத் தான் தமிழ்ப் பதிவாளர்னு ஒத்துக்கிடுவாங்களாம்.அதுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு நான் சொல்வதை நீங்க நம்பியே ஆகணும்.

12 Comments:

Pavals said...

ரைட்டேய்...!! ;-)

G.Ragavan said...

என்னய்யா சொல்ல வர்ரீரு.....வாரக்கடைசீல வீட்டுல சும்மா முழிச்சிக்கிட்டேயிருந்ததச் சொல்றீரா? வெளங்குறாப்புல சொன்னா என்ன?

துளசி கோபால் said...

12 விரல்கள்?????????????

Sud Gopal said...

ராசா:-
//ரைட்டேய்...!! ;-)//

ஒரு பேச்சிலரோட ஃபீலிங்கஸ் புரிஞ்சிகிட்ட உமக்கு சீக்கிரமே ஒரு கொலவிளக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

Sud Gopal said...

G.Ragavan:
//என்னய்யா சொல்ல வர்ரீரு.....வாரக்கடைசீல வீட்டுல சும்மா முழிச்சிக்கிட்டேயிருந்ததச் சொல்றீரா? வெளங்குறாப்புல சொன்னா என்ன?//

என்ன ஓய்.உமக்கு நெஜமாவே புரியலையா?இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீரா?

Sud Gopal said...

துளசி கோபால்:
12 விரல்கள்?????????????

6+6

துளசி கோபால் said...

தலையிலே இருக்கற நாலு முடியையும் பிச்சுக்கணுமா?

யாருக்கையா ஆறாறு விரல் இருக்கு?

உங்களுக்கா? நிஜமா? ஐய்யோ நான் பார்க்கலையே(-:

G.Ragavan said...

// என்ன ஓய்.உமக்கு நெஜமாவே புரியலையா?இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீரா? //

புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. இதென்ன திக்குத் தெரியாத காட்டில்....உன்னைத் தேடி நிதம் அலைந்தேன் வகையா? பாலும் கசந்ததடி தோழா! படுக்கையும் நொந்ததடான்னு பாடுறீங்களா! ம்ம்ம்....சீக்கிரமே உங்க காட்டுல திக்கு தெரியட்டும்.

G.Ragavan said...

// யாருக்கையா ஆறாறு விரல் இருக்கு?

உங்களுக்கா? நிஜமா? ஐய்யோ நான் பார்க்கலையே(-: //

டீச்சர். நானும் பார்க்கலை....... :-(

Sud Gopal said...

துளசி கோபால்:
//உங்களுக்கா? நிஜமா? ஐய்யோ நான் பார்க்கலையே(-: //
இருட்டில கவனிக்க மறந்திருப்பீங்க.

G.Ragavan:
//ம்ம்ம்....சீக்கிரமே உங்க காட்டுல திக்கு தெரியட்டும்.//
பார்ப்போம்.ஆனா இப்போதைக்கு நடக்காறாப்ல தெரியல.

//டீச்சர். நானும் பார்க்கலை....... :-( //
டீச்சர் எவ்வழியோ...இஷ்டூடண்ட் அவ்வழி...

ilavanji said...

//என்ன செய்யப் போகிறாய்??? //

ம்ம்ம்... ஒரு + . அதான் என்னால முடிஞ்சது!!!

12 விரல்கள்... சுதர்சன்.. நீங்க ரெண்டு கையிலையும் ரெண்டு சிகரெட்டு புடிப்பீகளா?? சொல்லவேயில்ல... !

இந்த பேச்சிலருங்க தொல்ல தாங்கலப்பா!!!

Sud Gopal said...

இளவஞ்சி:
//ம்ம்ம்... ஒரு + . அதான் என்னால முடிஞ்சது!!!//
ஒரு பேச்சிலரின் சோகத்தைச் சரியாப் புரிஞ்ச உமக்குப் பரிசா பத்து மாச வாடகைய அட்வான்சாக் கேக்காத ஹௌஸ் ஓனர் பெங்களூரில் கிடைக்கக் கடவது.

//இந்த பேச்சிலருங்க தொல்ல தாங்கலப்பா!!!//
கண்ணா,இன்னைக்கு பேச்சிலரா(bachelor) இருக்கிறவன் நாளைக்குக் கல்யாணம் கட்டீட்டுப் பேச்சிலராய் ஆய்டுவான்.அத்த நெனச்சிட்டு மனசத் தேத்திக்கோ...