13 March 2006

ரெண்டும் ரெண்டும் நாலு - சங்கிலித் தொடர்

வைகோ அம்மாவுடன் கை கோர்த்தது,ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை,தவமாய்த் தவமிருந்துக்குத் தரப்படாத அங்கீகாரம் கள்வனின் காதலிக்குக் கிடைப்பது,வாரணாசி குண்டுவெடிப்பை அரசியலாக்க அரசியல்வியாதிகள் முயல்வது என்று கதம்பமாய்த் தகவல்கள் வந்து இந்த ஆண்டின் முதல் குவார்ட்டரைக் களேபரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நேரத்திலே, கொஞ்ச நாள் நம்ம தொல்லையில் இருந்து சனங்க நிம்மதியா இருக்கட்டும் என்று நினைத்திருந்த போதே, நம்ம இளவஞ்சி என்னையும் இந்த ஆட்டத்துக்கு இஸ்து விட்டுட்டார்.

பிடித்த நான்கு அரசியல்வாதிகள்:
1. காமராஜர் - இவரைப் பத்தி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை
2. ராஜீவ் காந்தி - இந்தியா தொலைத்தொடர்புத் துறையில் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
3. ஜெயலலிதா - தோல்வி கண்டு துவளாது போராடும் குணம் கண்டு வியக்காத நாளில்லை.
4. ஏ.கே.ஆன்டனி - எளிமை,எளிமை மற்றும் எளிமை.

எனக்குப் பிடித்த நான்கு படங்கள்(வசனங்களுக்காகவும்):
1. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - "உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?மத்தவங்க நம்மளை மறந்திடறது.
2. சதி லீலாவதி : "என்னையே புடிக்கலயாமா,இதில பிர்ரேக் புடிச்சா என்ன? புடிக்காட்டி என்ன?"
3. தில் சாஹ்தா ஹை -"வைசே பீ பர்ஃபக்ஷன் கோ இம்ப்ரூவ் கர்னா முஷ்கில் ஹை"
4. திருவிளையாடல் - "ஆயிரம் பொன்னாச்சே.ஆயிரம் பொன்னாச்சே..."

பிடித்த நான்கு உணவு வகைகள்
1. இட்லி-என்னோட மெனுல இதுக்குதான் எப்போதுமே முதல் இடம்.வெள்ளை நிறமும் யாரோட உடலுக்கும் தீங்கு விளைவிக்காத நல்ல குணமும் கொண்ட இந்த இட்டிலியை வேண்டாம்னு யாராவது சொல்ல முடியுமா?மொதல்ல புடிக்காமப் போயிருந்தாலும் மஞ்சக்காமாலைல விழுந்த எழுந்த பிறகு இட்டிலி தான் என்னோட ஜிகிரி தோஸ்த்.மினி இட்லி,ஃப்ரைடு இட்லி,ரவா இட்லின்னு இப்போ இதுக்கு ஆயிரம் வாரிசுகள் வந்த போதும் என்னோட ஓட்டென்னமோ இட்லி+சாம்பார்க்குத் தான்.
2. கோதுமைப் பாயாசம் : யம்மீ..யம்மீ...இதுக்கு ரெசிப்பி ராகவன் தருவாரு.
3. தட்டைப்பயிறு + கத்தரிக்காய் :எளிமையான ஒரு கிராமிய உணவு.நல்லா இருக்குன்னு அதிகமாச் சாப்பிட்டா அவ்வளவு தான்.
4. எலுமிச்சை சாதம் : சமைக்க அதிக மெனக் கெடவேண்டியதில்லை.நான் சாப்பிடற மாதிரி சமைக்கும் வஸ்துகளில் இதுவும் ஒண்ணு.

விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்:
1.பழனி - பொறந்து,வளர்ந்து கொஞ்ச நாள் படிச்ச ஊர்.சாமி தியேட்டர் உப்புக்கடலை,முல்லையில வாங்கின மொத பேன்ட்,திருப்பூர் லாட்ஜ் ஜிலேபி,சித்தனாதன் கடை வாசனை விபூதி,சண்முக நதிப் பாலத்தில ஓட்டின சைக்கிள்,நெய்க்காரபட்டி லைப்ரரி,ஜெயராம் தியேட்டர்ல பார்த்த தசாவதாரம்.ஹூம்....
2.பாண்டிச்சேரி - கடல்,கடல் மேலும் கடல்.ஆனா அது மட்டுமே காரணமில்லை.
3.ஆலப்புழா - கடவுளின் சொந்த தேசம்னு சொல்றதில தப்பேயில்லை.
4.சூலூர் - சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா??மணிவண்ணன்,சிவக்குமார் இவங்களோட எனக்கும் இது தான் சொந்த ஊர்.

நான் அழைக்க விரும்பும் நால்வர்
1. ரம்யா நாகேஸ்வரன்
2. கேவிஆர்
3. யாத்திரீகன்
4. ஸ்ருசல்

12 Comments:

ilavanji said...

//பாண்டிச்சேரி - கடல்,கடல் மேலும் கடல்.ஆனா அது மட்டுமே காரணமில்லை.//

ஹிம்ம்.. இப்படி உள்ளர்த்தம் வைத்து எழுதினால் என்னை மாதிரி ஃபீல்டு அவுட் ஆன வாலண்டிரி ரிடயர்மெண்ட் வாங்குன(வாங்க வைக்கப்பட்ட.. )ஆளுங்களுக்கு எப்படி புரியும்?? :)

என்னவோ நீரும் பீரும் சொகமா இருந்தாச்செரி...

Pavals said...

//ஜெயராம் தியேட்டர்ல பார்த்த தசாவதாரம்.//
எந்த தசாவதாரம் ;-)

G.Ragavan said...

சுதர்சன்....மொதப்பேரா நீங்க போட்டுருக்கீங்க பாத்தீகளா...அதுதான் நானும் மொதப் பேரா போட்டது. கல்வித் தந்தை காமராஜர் அதற்குத் தகுதியானவர்தான்.

கோதுமைரவைப் பாயாசம்...நல்லாத்தான் இருக்கும். மொதமொதல்ல எம்.டி.ஆர்ல குடிச்சது. செய்யுறதும் ரொம்ப ஈசி. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோங்க...அதுக்கப்புறம் அடுப்படி சூடுபிடிக்கும்.

துளசி கோபால் said...

எதுக்கு ஒரு மாசம் பொறுக்கணும்?
அட ரா(கவா)மா!

G.Ragavan said...

// எதுக்கு ஒரு மாசம் பொறுக்கணும்?
அட ரா(கவா)மா! //

அப்பத்தான் நான் செய்ற பக்குவங்களையும் படம் பிடிச்சிப் போட முடியும்....இதச் செஞ்சு பாத்திருக்கியான்னு யாரும் கேட்டுறக்கூடாது பாருங்க...அதான்.

துளசி கோபால் said...

ஆஹா.... ராகவன் டிஜிட்டல் கேமெரா வாங்கியாச்சா?

G.Ragavan said...

// ஆஹா.... ராகவன் டிஜிட்டல் கேமெரா வாங்கியாச்சா? //

இல்ல டீச்சர். ஒரு பிரண்டு அமெரிக்கா போயிருக்கான். மார்ச் கடைசீல வர்ரான். வர்ரப்போ வாங்கீட்டு வரச் சொல்லீருக்கேன்.

Sud Gopal said...

இளவஞ்சி:
//ஹிம்ம்.. இப்படி உள்ளர்த்தம் வைத்து எழுதினால் என்னை மாதிரி ஃபீல்டு அவுட் ஆன வாலண்டிரி ரிடயர்மெண்ட் வாங்குன(வாங்க வைக்கப்பட்ட.. )ஆளுங்களுக்கு எப்படி புரியும்?? :)
என்னவோ நீரும் பீரும் சொகமா இருந்தாச்செரி...//
அட ராமா??? இப்படிக் குண்டக்க மண்டக்க பேசினா ஒரு மனுசன் என்ன தான் பண்ண முடியும்.நான் சொன்ன மேட்டரே வேற.
ராசா (Raasa):
//எந்த தசாவதாரம் ;-)//
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோ இல்லை ஏ.பீ.நாகராஜனோ எடுத்த தசாவதாரம் அது.அந்தப் படம் வந்தப்போ நீங்க அஞ்சாம்போ நாலாம்போ படிச்சுட்டி இருந்திருப்பீங்க.
4 smiley

Sud Gopal said...

G.Ragavan:
//கோதுமைரவைப் பாயாசம்...நல்லாத்தான் இருக்கும். மொதமொதல்ல எம்.டி.ஆர்ல குடிச்சது. செய்யுறதும் ரொம்ப ஈசி. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோங்க...அதுக்கப்புறம் அடுப்படி சூடுபிடிக்கும்.//
ஓ.கோதுமை ரவையிலயும் பாயாசம் செய்வாங்களா?? நான் சாப்பிட்டதே இல்லை.நான் சொன்னது ஒடச்ச கோதுமையில செய்யற பாயசம்.ஆஹா.சீக்கிரம் அடுப்படி சூடு புடிக்கட்டும்.

Sud Gopal said...

டிஜிட்டல் கேமரா வாங்கப் போற ராகவனுக்கும்,அதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெறப் போகும் "அடுப்படி"க்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய "ஓ"

ilavanji said...

//அட ராமா??? இப்படிக் குண்டக்க மண்டக்க பேசினா ஒரு மனுசன் என்ன தான் பண்ண முடியும்.நான் சொன்ன மேட்டரே வேற.//

என்னது?! அது பீர் மேட்டரும் இல்லையா?!! என் புத்தி வேற எதையாவது கோக்குபெப்சியா யோசிக்கறதுக்குள்ள நீங்களே என்னான்னு சொல்லிருங்க!! :)

Ravi Bala said...

சூலூரா சொந்த ஊர் உங்களுக்கு.எனக்கும் அதுவே.பெருமாள் கோவில் அருகில் வீடு.தங்களுக்கு எங்கேயோ?