03 July 2006

லலிதாம்மாவுக்கு சில கேள்விகள்

லலிதாம்மா,

கடைசியா நான் எப்போ என் கையால கடிதம் எழுதினேன்?

ஆங்...ஞாபகம் வந்திருச்சு.அஞ்சு வருஷம் முன்னாடி மும்பையில இருந்தப்போ இதே மாதிரியான ஒரு பெருமழைக்காலத்தில உங்களுக்கு எழுதினது தான் கடைசியா நான் எழுதின கடிதம்னு நினைக்கிறேன்.

வழக்கமான கடிதங்களோட ஃபார்மேட்ல நலம் நலமறிய ஆவல்,மற்றவை நேரில் அப்படின்னு எல்லாம் எழுதறது ரொம்பவும் ஃபார்மலா இருக்கறாப்ல தோணுது.அதனால கடிதம்னு சொல்ல முடியாத ஒரு உரை வடிவத்தில இந்தக் கடிதம்.

இதில இருக்கிற சில கேள்விகளை நான் பல்வேறு காலகட்டங்களில் உன் கிட்ட கேட்டு அதுக்கு உன்னோட மௌனமான புன்னகையே பதிலா வாங்கியிருக்கேன்.இருந்தாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளரா விக்கிரமாதித்த மகாராஜா மாதிரி நானும் கேட்கறத நிறுத்தினதில்லை.அப்புறம், இப்படி எல்லார் முன்னிலையிலும் உனக்கான கேள்விகளைப் போட்டு உடைப்பது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.என்னோட பல தப்புகளை மன்னிச்ச நீ இதையும் பெரிசுபடுத்தமாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

பப்புவுக்கு மதிய சாப்பாடு வச்சிருப்ப போலிருக்கு.போய் குக்கர் விசில் ஆஃப் பண்ணீட்டு வந்து நிதானமாப் படி.

1) அப்பாவைக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னால வரைக்கும் R.லலிதான்னு கையெழுத்து போட்டிட்டு இருந்த நீ கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் ஏன் G.லலிதான்னு போட ஆரம்பிச்சே?

2) என் கூட எப்போ ஃபோன்ல பேசினாலும் மொதல்ல "சாப்பிட்டியா கண்ணு"ன்னே ஏன் ஆரம்பிக்கறே?அது எந்த நேரமானலும் சரி,நான் எங்கே இருந்தாலும் சரி என் கூட தொலைபேசும் போது உன்னோட முதல் கேள்வி இது தான்.

3) "அரிசிக்காரர் வீட்டு ரங்கனாயகி அம்மாவோட கடைசி மருமக","நம்ம கோபாலண்ணன் சம்சாரம்","மிஸ்ஸஸ்.கோபால்","சங்கீதாம்மா" அப்படின்னு கூப்பிடறவங்களுக்கு உன்னோட உண்மையான பேரு தெரியுமா?அவங்கள விடு உனக்காவது உன்னோட பேரு ஞாபகம் இருக்கா?

4) என் கூட ஒண்ணாப்புப் படிச்ச மயில்சாமில இருந்து இப்போ கூட வேலை செய்யிற ராம்ஸ் வரைக்கும் எல்லார்த்தையும் ஞாபகம் வச்சிருக்க ஒனக்கு,உன்னோட பத்தாம்பு ஃபோட்டோல பக்கத்தில் ஒக்கார்ந்திருக்கரது சரசுவா இல்லை செல்வியான்னு தெரியாமப் போனது ஏன்?

5) நான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த என் கூட வேலை பார்க்கிற வெளியூர்ப் பசங்க கூட உன்னால கொஞ்சம் கூட பேச முடியாமப் போனதுக்காக நீ என்கிட்ட "இங்லீஸ்,ஹிந்தி தெரிஞ்ச அம்மாவுக்குப் பையனாப் பொறந்திருக்கலாம்னு தோணுதா கண்ணு" சொன்னது ஞாபகம் இருக்கா?நீ கிண்டலுக்கு சொன்னியா இல்ல நெசமாச் சொன்னியான்னு தெரியாது.இப்போ அந்தப் பசங்க ஒன் கூடப் பேசணும்னு தமிழ் படிச்சுட்டு இருக்காங்கன்னு ஒனக்குத் தெரியுமா?

இதுக்கேல்லாம் வழக்கம் போலவே உன் கிட்ட இருந்து பதில் வராதுன்னு தெரியும்.அதுக்காக நான் கேக்கறத மட்டும் நிறுத்தவே மாட்டேன்.

வாசல்ல குருவிக சத்தம் போடுது போல.அதுகளுக்கு தங்கமே தீனியாப் போட்டாலும் நீ பக்கத்தில இருக்கோணும்.அதுங்களைப் பார்க்கையில கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.

ஹூம்...லலிதாம்மா, கொஞ்ச நாள் நீ என் கூட வந்து இருந்திட்டுப் போகக் கூடாதா?

21 Comments:

துளசி கோபால் said...

வீடு வசதியா இருந்தா, பேசாம அம்மாவைக் கொண்டுவந்து வச்சுக்கக்கூடாதா?

பாவம், புலம்பறீங்களேன்னு ஒரு மனக்கஷ்டம்தான்.

G.Ragavan said...

:-)

இதுக்குதான் நான் பெங்களூர்ல மொதல்ல வீடு பாக்கும் போதே சின்னதா டபுள் பெட்ரூம் வீடு பாத்து நண்பர்கள் யார் கூடயும் பகுந்துக்காதது. அம்மா அப்பா வர்ரப்போ வசதியாயிருக்குமேன்னு. இப்ப அப்பார்ட்மெண்டாவே ஆயிருக்கு.

சாதரண நாள்ள ஒன்னும் தெரியாது. காச்சக் கீச்ச வந்துட்டாப் போதும்...பொலம்பல் வந்திரும். ஒங்களுக்கு மேலுக்கு ஒன்னுமில்லையே?

ilavanji said...

அடடே!

அம்மாவுக்கு கடிதமா?! இதுவரை நினைச்சுப்பார்க்காத விசயமா இருக்கே!

கேள்விகள் அருமையா இருக்குங்க! அதுவும் அந்த 2வது... :)))

பொன்ஸ்~~Poorna said...

நல்லாத் தான் கேட்டிருக்கீங்க.. அந்த குருவிகளோட உங்க அம்மாவையும் கொஞ்ச நாள் வீட்டுக்குக் கூட்டி வந்து வச்சிக்குங்க.. சரியாய்டும்

ஆமாம், சுதர்சனம்மான்னு சொல்ல மாட்டாங்களா?

ராகவன்,
//சின்னதா டபுள் பெட்ரூம் வீடு பாத்து நண்பர்கள் யார் கூடயும் பகுந்துக்காதது. அம்மா அப்பா வர்ரப்போ வசதியாயிருக்குமேன்னு. //
No Comments :)))

Anonymous said...

//லலிதாம்மாவுக்கு சில கேள்விகள்

நான் கூட ஏதாச்சும் அரசியல் பதிவா இருக்கும்னு நினைச்சேன்.

Jokes ahead, வித்தியாசமான கோணத்தில் பதிவு. கேள்விகள் எல்லாம், குறிப்பாய் 2 மற்றும் 4 , என்னை மிகவும் கவர்ந்தது.

கஸ்தூரிப்பெண் said...

வழக்கமா ஃபோனில பேசும்பொழுது, கடிதாசில விலாவாரியா எழுதுகிறேம்பாங்க, கடுதாசி எழுதும்பொழுது இதையெல்லாம் எழுத முடியாது பேசுனாத்தான் முடியும்பாங்க!!! ஆனா, நீங்க கேள்விகளை அடுக்க ஆரம்பிச்சிருக்கீங்க. தொடரட்டும் உங்க கனைகள்.

ஆமாம், அம்மாவுக்கு நகல் எடுத்து அனுப்பிச்சிட்டீங்களா?

Sud Gopal said...

//வீடு வசதியா இருந்தா, பேசாம அம்மாவைக் கொண்டுவந்து வச்சுக்கக்கூடாதா?//

லலிதாம்மா,இங்கே வந்திட்டா குருவிகளுக்கும்,பப்புவுக்கும்,அப்பாவுக்கும் சாப்பாடு பிரச்சினை ஆகிடும்.

//பாவம், புலம்பறீங்களேன்னு ஒரு மனக்கஷ்டம்தான்.//

ஆஹா...தன்யனானேன்...

Sud Gopal said...

//சாதரண நாள்ள ஒன்னும் தெரியாது. காச்சக் கீச்ச வந்துட்டாப் போதும்...பொலம்பல் வந்திரும்.//

அனுபவம் பேசுது போல.

//ஒங்களுக்கு மேலுக்கு ஒன்னுமில்லையே?//

இல்லை.இல்லை.இல்லவே இல்லை...ஒம்ம கை இப்போ எப்படி இருக்குது?

Sud Gopal said...

//அதுவும் அந்த 2வது... :))) //

இந்தக் கேள்வி கேக்காத அம்மாக்களே இல்லைன்னு திட்டவட்டமாச் சொல்லலாம் போல.

Sud Gopal said...

//அந்த குருவிகளோட உங்க அம்மாவையும் கொஞ்ச நாள் வீட்டுக்குக் கூட்டி வந்து வச்சிக்குங்க.. சரியாய்டும்//

பாசக்கார குருவிக.சூலூரை விட்டு எங்கனயும் வராதுக.

//சுதர்சனம்மான்னு சொல்ல மாட்டாங்களா?//

ரொம்ப அரிது.

//ராகவன்,
//சின்னதா டபுள் பெட்ரூம் வீடு பாத்து நண்பர்கள் யார் கூடயும் பகுந்துக்காதது. அம்மா அப்பா வர்ரப்போ வசதியாயிருக்குமேன்னு. //
No Comments :))) //

ஓவர் டூ ஜீரா.

பாலசந்தர் கணேசன். said...

உள்ளம் தொட்ட பதிவு.

Sud Gopal said...

விக்னேஷ்,வாங்க.வாங்க...

//குறிப்பாய் 2 மற்றும் 4 , என்னை மிகவும் கவர்ந்தது//

வீட்டுக்கு வீடு வாசப்படி போல இருக்கு.அது சரி உங்க தண்டோராவில வச்சிருக்கிற உலகக்கோப்பை ஓட்டெடுப்பைக் கொஞ்சம் அப்டேட் பண்ணக் கூடாதா?

இன்னமும் ப்ரேசில்,அர்ஜெண்டினா எல்லாம் லிஸ்டில இருக்கே.

Sud Gopal said...

வாங்க,வாங்க கஸ்தூரிப்பெண்...

//ஆமாம், அம்மாவுக்கு நகல் எடுத்து அனுப்பிச்சிட்டீங்களா?//

பதில் கிடைக்காதுன்னு தெரியும்.அதனால இதுவரை செய்யலை.

Unknown said...

எங்க அம்மா நெனப்ப கொண்டு வந்து அழ வச்சிட்டீங்க. "போடி, இவ்வளவு குளிர்ல யார் இருப்பா, கோயிலா குளமா இருக்கு இங்க" - ன்னுட்டாங்க...:-((

Anonymous said...

font change panni pathichukapa..

¦À¡ÐÅ¡ ±øÄ¡ «õÁ¡ì¸Ùõ þôÀÊò¾¡ý SUD.
¬É¡ þ§¾ §¸ûÅ¢¸¨Ç ¯ý À¢û¨Ç¸û
«Åí¸ «õÁ¡Å¢¼õ §¸ð¸¡Á À¡òÐì¸Ã¾¢Ä¾¡ý
¿£ þ¨¾ ±Ø¾¢Â¾ü¸¡É ¦ÅüÈ¢ «¼í¸¢Â¢ÕìÌ.

ManiKandan

Sud Gopal said...

ManiKandan:

பொதுவா எல்லா அம்மாக்களும் இப்படித்தான் Sud.

ஆனா இதே கேள்விகளை உன் பிள்ளைகள் அவங்க அம்மாவிடம் கேட்காம பாத்துக்கரதிலதான் நீ இதை எழுதியதற்கான வெற்றி அடங்கியிருக்கு.

G.Ragavan said...

////ராகவன்,
//சின்னதா டபுள் பெட்ரூம் வீடு பாத்து நண்பர்கள் யார் கூடயும் பகுந்துக்காதது. அம்மா அப்பா வர்ரப்போ வசதியாயிருக்குமேன்னு. //
No Comments :))) //

ஓவர் டூ ஜீரா. //

என்னது ஓவர் டூ ஜீரா. அதான் பொன்ஸ் நோ கமெண்ட்ஸ் சொல்லீட்டாங்கள்ள......நீங்க வேற....தோண்டிக்கிட்டும் துருவிக்கிட்டும்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நெகிழ வைத்து விட்டது உங்கள் கேள்விகள்...

யாத்ரீகன் said...

vegamaana vazhkaila ithelaam amma kita kelviya ketkanumu thonala.. but manasula thonaama irunthathilla..

3 & 4 .. romba feelings aagidichu.. sudharsan..

ramachandranusha(உஷா) said...

பொதுவாக "அம்மா கோண்டு" வாய் இருக்கும் பையன்கள், கல்யாணம் ஆனா, அப்படியே மனைவி
சொல்லே மந்திரமாய் மாறிவிடுவார்கள் என்பது ஐதீகம் :-)
ஆனால் எல்லாரும் அல்ல :-(
கண்ணைத் துடைத்துக்கொண்டு,
திருமதி உஷா

நாமக்கல் சிபி said...

முதல்ல பார்த்தப்ப அரசியல் பதிவுனு நினைத்து படிக்காமல் விட்டுவிட்டேன் :-(

அருமையான பதிவு... ரொம்ப Feelinga இருந்தா 2 நாள் லீவு போட்டு வீட்டுக்கு போயிட்டு வாங்க.